முகப்பு
நாகப்பட்டினம்

நீதிமன்றங்களில் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி ஆர்ப்பாட்டம்

நீதிமன்றங்களில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை

Updated On : 25 டிசம்பர் 2018, 8:44 am IST
பகிர்:

நீதிமன்றங்களில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில் திங்கள்கிழமை நீதித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
நாகை மாவட்ட நீதிமன்றம் முன் சங்க மாவட்டத் தலைவர் ஜி. ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட மாறுதல்களை கைவிட்டு, நீதிமன்ற தலைமை நிர்வாக அலுவலர்கள் மற்றும் சிரஸ்தார்களை சொந்த மாவட்டங்களிலேயே பணியமர்த்த வேண்டும், நீதிமன்றங்களில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பவேண்டும், நீதிமன்ற ஊழியர்களின் பதவி உயர்வுக்கு உத்தரவாதம் அளிக்கவேண்டும், மாநில மற்றும் மாவட்ட அளவில் குறைதீர் குழுக் கூட்டங்களை  நடத்தி பணியிட மாறுதல்களை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில், செயலர் ஜி. பாண்டியன், பொருளாளர் கே. புகழேந்தி, துணைத் தலைவர்கள் எம். ராஜ்குமார், எம். ரவி, இணைச் செயலர்கள் ஏ.ஜி. கவிதா, பி. நேதாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments