அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை
நாகை மாவட்டம், குத்தாலம் அருகே உள்ள பழைய கூடலூர் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர்
நாகை மாவட்டம், குத்தாலம் அருகே உள்ள பழைய கூடலூர் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் இராசமாணிக்கம் நினைவு அறக்கட்டளை சார்பில், கல்வி ஊக்கத்தொகை ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
நாகை மாவட்டம், குத்தாலம் வட்டம், பழைய கூடலூரை சேர்ந்த சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் இராசமாணிக்கம் நினைவு அறக்கட்டளை சார்பில், ஆண்டுதோறும் பழையகூடலூர் ஊராட்சி ஓன்றிய நடுநிலைப்பள்ளியில் பயின்று 8-ஆம் வகுப்பு தேர்வில் முதல் 3 இடங்களைப் பெறும் மாணவர்கள் மற்றும் மாணவியருக்கு தனித்தனியே கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, 2017-18-ஆம் கல்வியாண்டில், 8-ஆம் வகுப்பு தேர்வில் முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவ, மாணவியருக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி, பழையகூடலூரில் நடைபெற்றது. அறக்கட்டளை நிர்வாகி அண்ணாதுரை படத்திறப்பு விழாவை முன்னிட்டு, நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மயிலாடுதுறை அருண்பிரியா மருத்துவமனை நிர்வாக இயக்குநர் செல்வம் தலைமை வகித்தார்.
பள்ளி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன், அறக்கட்டளை நிர்வாகிகள் பாண்டியன், ராஜேந்திரன், மதிவாணன், சுதா அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவர்கள் அஜய், மணிகண்டன், ஹரிஸ்ராஜ் மற்றும் மாணவியர் திரிஷா, நிஷாந்தி, கோபிகா ஆகியோருக்கு முறையே ரூ.5,000, ரூ.3,000 மற்றும் ரூ.2,000 ஊக்கத்தொகை, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில், ஆசிரியர்கள் பன்னீர்செல்வம், முத்துக்குமரன், சாந்தி, அஞ்சுகம் மற்றும் அறக்கட்டளை பொறுப்பாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.