கண்ணகி வீடுபேறு அடைந்த நாள் வழிபாடு இன்று நடக்கிறது
பூம்புகார் மேலையூரில் உள்ள பத்தினிக் கோட்டம் என்றழைக்கப்படும் கண்ணகி கோயிலில், கண்ணகி வீடுபேறு அடைந்த நாள் வழிபாடு திங்கள்கிழமை (ஜூலை 23) நடைபெறுகிறது.
பூம்புகார் மேலையூரில் உள்ள பத்தினிக் கோட்டம் என்றழைக்கப்படும் கண்ணகி கோயிலில், கண்ணகி வீடுபேறு அடைந்த நாள் வழிபாடு திங்கள்கிழமை (ஜூலை 23) நடைபெறுகிறது.
கற்புக்கரசி, பெண்மையின் தெய்வம் என போற்றப்படும் கண்ணகி, நாகை மாவட்டம் பூம்புகாரில் வாழ்ந்து பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தியதாக சிலப்பதிகாரம் கூறுகிறது. கண்ணகி ஆடி மாதம் அனுஷ நட்சத்திரத்தன்று பூப்பல்லக்கில் ஏறி, வைகுண்டம் சென்று, வீடுபேறு அடைந்ததாக ஐதீகம்.
இதையொட்டி, ஆண்டுதோறும் ஆடி மாத அனுஷ நட்சத்திர தினத்தன்று, பூம்புகார் மேலையூரில் உள்ள கண்ணகி கோயிலான பத்தினிக் கோட்டத்தில் சிறப்பு வழிபாடு நடைபெறும். அதன்படி நிகழாண்டு, கண்ணகி வீடுபேறு அடைந்த நாள் வழிபாடு திங்கள்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
இதையொட்டி, கண்ணகி சிலைக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறவுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை பத்தினிக் கோட்ட காப்பாளரும், சீனிவாசா மேல்நிலைப் பள்ளி செயலாளருமான ராஜசேகரன், உதவி தலைமையாசிரியர் ரவி ஆகியோர் செய்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.