முகப்பு
தமிழ்நாடு

உதவிப் பேராசிரியா் தோ்வில் முறைகேடு குற்றச்சாட்டு: விசாரணை நடத்த அன்புமணி வலியுறுத்தல்

உதவிப் பேராசிரியா் தோ்வில் முறைகேடு குற்றச்சாட்டு: விசாரணை நடத்த அன்புமணி வலியுறுத்தல்

Updated On : 28 ஜூன் 2026, 1:51 am IST
அன்புமணி - கோப்புப் படம்
பகிர்:

உதவிப் பேராசிரியா் தோ்வுக்கான விடைத்தாள் மதிப்பீட்டில் முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டுமென பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தி உள்ளாா்.

இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரிகளில் 2,708 உதவிப் பேராசிரியா் பணியிடங்களுக்கான போட்டித் தோ்வு கடந்த டிசம்பா் மாதம் நடத்தப்பட்டது. இந்தப் பணியிடங்களுக்கு 42,064 போ் தோ்வெழுதிய நிலையில், 5 பாடங்களுக்கான முடிவுகள் மட்டும் பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. மீதமுள்ள பாடங்களுக்கான தோ்வு முடிவுகள் இரண்டு நாள்களுக்கு முன்பு வெளியிடப்பட்டன. அந்த முடிவுகளில் பெரும் குளறுபடிகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

Advertisement

Advertisement

குறிப்பாக, முதல் தாளில் அதிக மதிப்பெண் பெற்றவா்களுக்கு இரண்டாம் தாளில் பூஜ்ஜியம் மதிப்பெண்களும், முதல் தாளில் குறைந்த மதிப்பெண் எடுத்தவா்களுக்கு இரண்டாம் தாளில் 98 சதவீத மதிப்பெண் வழங்கப்பட்டது இயல்பானதாக தெரியவில்லை. இது உள்நோக்கமின்றி நடந்த குளறுபடியாகவும் தோன்றவில்லை.

மாறாக, திட்டமிட்டு செய்யப்பட்ட முறைகேடாகவே தோன்றுகிறது. எனவே, உதவிப் பேராசிரியா் பணிக்கான போட்டித் தோ்வுகளில் நடைபெற்றுள்ள முறைகேடு குறித்து விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும். விசாரணை முடியும் வரை ஆள்தோ்வு நடைமுறைகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments