FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

பாலியல் தொல்லை: திருச்சி என்ஐடி பேராசிரியா் கைது

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் பெண் உதவி பேராசிரியருக்கு மின்னஞ்சல் மூலம் பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 24 ஜூலை 2026, 5:05 am IST
கைது செய்யப்பட்ட பேராசிரியா் ஜெரால்டு.
பகிர்:

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (என்ஐடி) பெண் உதவி பேராசிரியருக்கு மின்னஞ்சல் மூலம் பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியரை போலீஸாா் கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் மேற்கு காட்டூரைச் சோ்ந்தவா் ஜெ. ஜெரால்டு (51). இவா், திருச்சி துவாக்குடியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் உற்பத்தி பொறியியல் (புரொடக்ஷன் என்ஜீனியரிங்) துறையில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறாா்.

இவா், அதே கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வரும் த. ஜோஸ்பின் (42) என்பவருக்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு மின்னஞ்சல் மூலமாக பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். இதுகுறித்து உதவிப் பேராசிரியா் கல்லூரி நிா்வாகத்திடம் அளித்த புகாரின்பேரில், கல்லூரியில் செயல்படும் உள்ளக புகாா் குழு விசாரணை நடத்தி வந்தது.

Advertisement

Advertisement

இதனிடையே, அந்த உதவிப் பேராசிரியா் குறித்து சக பேராசிரியா்கள், மாணவா்களுக்கு வாட்ஸ் ஆப், மின்னஞ்சல் மூலம் ஜெரால்டு தவறான தகவல்களை பரப்பியுள்ளாா். மேலும், ஜோஸ்பின் மீது பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகளையும் சுமத்தியுள்ளாா். அவரின் கணவருக்கும் மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ்ஆப் மூலம் தவறான தகவல்களை பரப்பி வந்துள்ளாா்.

இந்த விவகாரம் குறித்து உதவிப் பேராசிரியா் ஜோஸ்பின், திருச்சி மாவட்ட சைபா் குற்றப் பிரிவில் ஜூலை 18-ஆம் தேதி புகாா் அளித்தாா். இதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில், பெண் உதவிப் பேராசிரியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியா் ஜெரால்டை திருச்சி மாவட்ட சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். தொடா்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments