நாகப்பட்டினம்

நாகூரில் அயோடின் உப்பு குறித்து கடைகளில் ஆய்வு

DIN


நாகூர் பகுதியில் உள்ள கடைகளில் விற்பனை செய்யப்படும் உப்புகளில் அயோடின் கலக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து நகராட்சி உணவுப் பாதுகாப்பு அலுவலர் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் 2006 -இன் படி, அயோடின் கலக்காத உப்பு விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, அனைத்துக் கடைகளிலும் அயோடின் கலந்த உப்புகளை மட்டுமே மனித பயன்பாட்டுக்குரிய உப்பாக விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஆண்டு தோறும் அக். 21-ஆம் தேதி சர்வதேச அயோடின் குறைபாடு நீக்கல் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, நாகூர் பகுதியில் உள்ள கடைகளில் அயோடின் உப்பு விற்பனை குறித்து சனிக்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
நாகை மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் ஜி.செல்வராஜ் உத்தரவின் பேரில், நாகை நகராட்சி உணவுப் பாதுகாப்பு அலுவலர் ஏ.டி. அன்பழகன் இந்த ஆய்வை மேற்கொண்டார்.
நாகூர் பிரதான சாலையில் உள்ள மளிகைக் கடைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, உணவுப் பயன்பாட்டுக்கான உப்பில் அயோடின் கலக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து பரிசோதனை செய்யப்பட்டது. மேலும், தாமாகவே பரிசோதித்து அறியும் வகையில், அயோடின் கண்டறியும் வேதிப்பொருள் குப்பிகள் மளிகைக் கடை நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

ஹேமந்த் சோரனின் மனு தள்ளுபடி!

தனிப் பாதுகாப்புப் பெறுவதற்காக பொய்ப் புகார் தந்த இந்து முன்னணி பிரமுகர் கைது!

பாரதி கண்ட புதுமைப்பெண்!

லாலு பிரசாத் மகள் ரோஹிணிக்கு எதிராக களமிறங்கும் லாலு பிரசாத்?

SCROLL FOR NEXT