நாகப்பட்டினம்

சமூகத் தணிக்கை சிறப்பு கிராமசபைக் கூட்டம்

DIN


நாகை மாவட்டம், குத்தாலம் ஒன்றியத்தில், 4 ஊராட்சிகளில் சமூகத் தணிக்கை சிறப்பு கிராமசபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
பண்டாரவாடை ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில் வட்டார வள அலுவலர் வெங்கட்ராஜீலு கலந்துகொண்டு, 2017-18-ஆம் ஆண்டில் ரூ.45 லட்சம் செலவில் செய்யப்பட்ட 5 பணிகளின் தணிக்கை பதிவேடுகள், அளவீடு புத்தகங்கள் உள்ளிட்ட விவரங்களை வாசித்து, பொதுமக்களின் பார்வைக்கு வைத்தார். மேலும், பொதுமக்களிடமிருந்து புதிய வேலை அட்டை உள்ளிட்ட 18 மனுக்கள் பெறப்பட்டன.
இதேபோல், மாதிரிமங்கலம் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில், வட்டார வள அலுவலர் ஆரோக்கியராஜ் பங்கேற்று, ரூ.13 லட்சம் செலவில் மேற்கொள்ளப்பட்ட 5 பணிகளின் தணிக்கை பதிவேடுகள், அளவீடு புத்தகங்கள் உள்ளிட்ட விவரங்களைப் பொதுமக்களின் பார்வைக்கு வைத்தார். புதிய வேலை அட்டை உள்ளிட்ட 15 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. இது தவிர அரிவளூர், கோடிமங்கலம் ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி: விஜய்

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

தமிழ்நாட்டு வீரர்கள் மீது பிசிசிஐ-க்கு பாரபட்சம் ஏன்? பத்ரிநாத்

வணிக சிலிண்டர் விலை குறைப்பு: எவ்வளவு?

தலைமைச் செயலக பணி பெயரில் போலி நியமனம்: தரகா்களிடம் பணம் கொடுத்து ஏமாறும் பட்டதாரிகள்

SCROLL FOR NEXT