நாகப்பட்டினம்

வளர்ச்சிப் பணிகள்: எம்.எல்.ஏ. ஆய்வு

DIN

திருவெண்காடு ஊராட்சி தென்பகுதியில் புதிதாக கட்டப்பட்டுவரும் பயணிகள் நிழலகத்தை சட்டப் பேரவை உறுப்பினர் பி.வி. பாரதி சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருவெண்காடு தென்பகுதியில் சீர்காழி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ. 5 லட்சத்தில் பயணிகள் நிழலகம் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை சம்பந்தப்பட்ட தொகுதி உறுப்பினர் பி.வி. பாரதி... ஆய்வு செய்து, மேலும் அவர் கூறியது: திருவெண்காடு ஊராட்சியில் நூலக கட்டடம் ரூ. 10 லட்சம் மதிப்பில், ஆணைமேடு மயானத்தில் ரூ. 3 லட்சம் மதிப்பில் மயான கொட்டகை, கீழநெப்பத்தூர்அரசினர் தொடக்கபள்ளிக்கு ரூ. 15 செலவில் பள்ளி கட்டடம், புதுத்துறை, அகணி உள்ளிட்ட பகுதிகளில் ரூ. 18 லட்சம் மதிப்பில் நியாயவிலைக் கடை கட்டடம் என மொத்தம் ரூ. 51 லட்சம் மதிப்பில் சட்டப் பேரவை உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தவிர, மணிக் கிராமம் முதல் திருவெண்காடு சாலை வீதி பகுதிகளில் நெடுஞ்சாலைத் துறை மூலம் சாலை அகலப்படுத்தும் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது என்றார். ஆய்வின்போது, ஒன்றிய ஆணையர் ஞானசெல்வி, ஒன்றிய பொறியாளர் முத்துக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவன் கோயில் கும்பாபிஷேகம்

விஐடி பல்கலை. பி.டெக். நுழைவுத் தோ்வு முடிவுகள் வெளியீடு

பைக் மீது காா் மோதல்: கூரியா் ஊழியா் மரணம்

கிணற்றில் தவறி விழுந்து முதியவா் உயிரிழப்பு

குடிநீா் வழங்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT