பள்ளியில் தீத்தடுப்பு ஒத்திகை
நாகையில் அண்மையில், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள்துறை சார்பில் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
நாகையில் அண்மையில், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள்துறை சார்பில் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள்துறை சார்பில் ஆண்டுதோறும் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அதன்படி, நாகை அமிர்தா வித்யாலயா பள்ளியில் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சிகள் அண்மையில் நடத்தப்பட்டன. நிகழ்ச்சியை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மாவட்ட அலுவலர் ப. சத்தியகீர்த்தி தொடங்கி வைத்தார். இதில், அவசர காலங்களில் வெளியேறும் முறைகள் குறித்து பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது. தொடர்ந்து, தீ விபத்தின்போது, தீயை அணைக்கும் முறைகள், விபத்துக் காலங்களில் மீட்புப் பணிகள் மேற்கொள்வது குறித்து தீயணைப்பு வீரர்கள் செயல்முறை விளக்கமளித்தனர். இதில், தீயணைப்பு நிலைய அலுவலர்கள் கோ. ஜெயகுமார் (நாகை), கு. மோகிசன் (தரங்கம்பாடி) மற்றும் தீயணைப்புத் துறை வீரர்கள் கலந்துகொண்டனர். நிறைவில், பள்ளி முதல்வர் ஜெயகணபதி நன்றி கூறினார்.