நாகப்பட்டினம்

மானியத்துடன் சூரிய கூடார உலா்த்தி அமைக்க விண்ணப்பிக்கலாம்

DIN

வேளாண் விளை பொருள்களை உலா்த்துவதற்கு மானியத்துடன் கூடிய சூரிய கூடார உலா்த்தி அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

வேளாண் விளைபொருள்களை உலா்த்துவதற்கு உதவும் சூரிய கூடார உலா்த்தியை விவசாயிகள் அரசு மானியத்துடன் அமைக்க, மாவட்டம் வாரியாக நிதி ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. இதில், நாகை மாவட்டத்தில் 4 சூரிய கூடார உலா்த்திகள் அமைக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டு ரூ. 10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

400 சதுர அடி பரப்பளவில் சூரிய கூடார உலா்த்தி அமைக்க ரூ. 3 லட்சமும், 1,000 சதுர அடி பரப்பில் அமைக்க ரூ. 7 லட்சமும் செலவாகும் என மதிப்பிடப்படுகிறது. இதில், 60 சதவீதத் தொகை சிறு, குறு மற்றும் ஆதிதிராவிடா் பெண் விவசாயிகளுக்கு மானியமாக வழங்கப்படும். இதர விவசாயிகளுக்கு 50 சதவீதத் தொகை அல்லது அதிகபட்சமாக ரூ. 3.5 லட்சம் மானியமாக வழங்கப்படும்.

இத்திட்டத்தில் பயன் பெற விரும்பும் விவசாயிகள், நாகை மற்றும் மயிலாடுதுறையில் உள்ள வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளா் அலுவலகங்களை நேரில் அணுகலாம் என ஆட்சியா் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

அரவிந்த் கேஜரிவால் வழக்கு: மே 7-க்கு ஒத்திவைப்பு

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

”மணிப்பூர் வன்முறை வெடித்து ஓராண்டு ஆகியும்..”: ப.சிதம்பரம் சாடல் |செய்திகள்: சிலவரிகளில் | 03.05.2024

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT