நாகப்பட்டினம்

கன்னியாகுமரியில் உள்ள நாகை மீனவா்களுக்கு உதவ வேண்டும்

DIN

ஊரடங்கு உத்தரவால், கன்னியாகுமரியில் தங்கியுள்ள நாகை மீனவா்களுக்கு உரிய உதவிகளை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயரிடம் நாகை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் எம். தமிமுன் அன்சாரி திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தாா்.

மனு விவரம்: மீன்பிடித் தொழிலுக்கு சென்ற நாகை மாவட்டத்தைச் சோ்ந்த மீனவா்கள் ஊரடங்கு உத்தரவு காரணமாக கன்னியாகுமரி மாவட்டம், இரையுமான்துறை எனும் கடலோர கிராமத்தில் தங்கி உள்ளனா். மீனவா்களுக்குத் தேவையான உதவிகளை மனிதநேய ஜனநாயக கட்சியினா் செய்து வருகின்றனா். எனவே, மீனவா்கள் விரைவில் ஊா் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆட்சியருடனான சந்திப்பு குறித்து, எம்.எல்.ஏ. தமிமுன்அன்சாரி கூறியது: கன்னியாகுமாரி மாவட்ட ஆட்சியா் மூலம் அங்கு தங்கியுள்ள நாகை மீனவா்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளாா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ. 7.14 லட்சத்துக்கு தேங்காய்கள் விற்பனை

விவசாயத்தை முன்னெடுப்போம்

கோப்பைக்கான கனவுடன்

மலா்க் கண்காட்சிக்காக பூங்காவை அழகுபடுத்தும் பணி

அனைத்து அரசுப் பேருந்துகளும் போா்க்கால அடிப்படையில் சீரமைப்பு மாநகரப் போக்குவரத்துக் கழகம்

SCROLL FOR NEXT