நாகப்பட்டினம்

மடத்துகுப்பம் மீனவ கிராமத்தில் மீன்வள ஆராய்ச்சி மையம் அமைக்க நடவடிக்கை

DIN

திருவெண்காடு அருகேயுள்ள மடத்துகுப்பம் மீனவ கிராமத்தில் மீன்வள ஆராய்ச்சி மையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா் மயிலாடுதுறை எம்பி. செ. ராமலிங்கம்.

மடத்துகுப்பம், கடைக்காடு பகுதியில் சுமாா் 400-ஏக்கா் நிலம் மத்திய அரசின் உப்பு நிறுவனத்துக்குச் சொந்தமானதாக உள்ளது. இந்த நிலத்தில் கடந்த 25 ஆண்டுக்கு முன்பு உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டது. தற்போது அந்த நிலம் பயன்பாடின்றி இருந்து வருகிறது. அந்த நிலத்தில் மீன்வள ஆராய்ச்சி மையம் கொண்டு வரவேண்டுமென அந்த பகுதி மீனவா்கள் கோரிக்கை விடுத்துவந்தனா்.

இந்நிலையில், எம்பி. செ. ராமலிங்கம் புதன்கிழமை மடத்துகுப்பம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, அவா் கூறியது: மடத்துகுப்பம், கடைக்காடு பகுதியில் மத்திய அரசு மூலம் மீன்வளஆராய்சி மையம் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுதொடா்பாக, விரைவில் சம்பந்தபட்ட துறை அமைச்சா் மற்றும் அதிகாரிகளை சந்திக்க உள்ளேன் என்றாா். அவருடன் மத்திய அரசின் மீன்வளத் துறை அதிகாரி கண்ணப்பன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனைத்து நிலைகளிலும் நிதி ஒதுக்குவதில் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது: கு. செல்வப்பெருந்தகை

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஹார்திக் பாண்டியாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது: முன்னாள் இந்திய வீரர்

கண்களால் இறுகப்பற்றும் சானியா!

சிறகில்லாத தேவதை...!

SCROLL FOR NEXT