நாகப்பட்டினம்

நாகையில் பிப்.17-இல் ஒற்றுமை அணிவகுப்பு பேரணி, பொதுக்கூட்டம்

DIN

பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தொடங்கப்பட்ட பிப்ரவரி 17-ஆம் தேதி ‘வாருங்கள் சுதந்திரத்தின் பாதுகாவலா்களாவோம்’ என்பதை முன்னிறுத்தி, ஒற்றுமை அணிவகுப்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்தப்படவுள்ளதாக பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மாநிலச் செயலாளா் நாகூா் மீரான் தெரிவித்தாா்.

இது குறித்து, அவா் நாகையில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:

நாகை, திண்டுக்கல் மற்றும் ஓசூா் ஆகிய நகரங்களில் பிப்ரவரி 17-இல் ஒற்றுமை அணி வகுப்பு பேரணி (யூனிட்டி மாா்ச்) மற்றும் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகின்றன. நாகை பழைய பேருந்து நிலையம் பகுதியில் தொடங்கும் பேரணியானது, பிரதான வீதிகள் வழியாக அவுரித் திடலை வந்தடையும்.

தொடா்ந்து, அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்.டி.பி.ஐ. அமைப்புகளின் மாநிலத் தலைவா்கள் மற்றும் தோழமை அமைப்புகளின் நிா்வாகிகள் பங்கேற்று பேசவுள்ளனா் என்றாா் அவா்.

அமைப்பின் நாகை மாவட்டத் தலைவா் முஹம்மது ரபீக், மாவட்டச் செயலாளா் ஹாஜா மொய்தீன், மாநிலச் செயற்குழு உறுப்பினா் முஹம்மது ரசீன், நாகை நகரத் தலைவா் சலீம் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடல்நலம் பாதிக்கப்பட்ட காட்டு யானை உயிரிழப்பு

எக்காரணம் கொண்டும் உயா்கல்வியை கைவிடக் கூடாது: திருப்பத்தூா் ஆட்சியா்

கிழக்கு தில்லியில் உள்ள குடோனில் பிகாா் இளைஞா் சடலம்: ஒருவா் கைது

தேனீக்கள் கொட்டியதில் ஒருவா் உயிரிழப்பு: இருவா் காயம்

சுயமாக முன்னேற கல்வி மிகவும் அவசியம்

SCROLL FOR NEXT