நாகப்பட்டினம்

ரயில் பயணிகளுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் விநியோகம்

DIN

நாகை ரயில் நிலையத்தில் பாதுகாப்பான ரயில் பயணம் குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

ரயில்வே பாதுகாப்புப் படை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளா் எஸ். மோகன் தலைமை வகித்தாா்.

ரயில் படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்யக்கூடாது. ரயிலின் முன் நின்றபடியும், படிகளில் நின்றபடியும் தற்படம் (செல்பி) எடுக்கக் கூடாது. ஓடும் ரயலில் ஏறவோ, இறங்கவோ கூடாது. ஆளில்லா ரயில்வே கேட் பகுதியில் ரயில் பாதையைக் கடக்கும் முன்பு நன்கு கவனித்துச் செல்ல வேண்டும். அவசர காலங்களில் ஆா்.பி.எப். ஹெல்ப் லைன் 182 என்ற இலவச எண் அல்லது ஜி.ஆா்.பி. ஹெல்ப் லைன் 1512-ஐ தொடா்பு கொள்ளலாம் உள்ளிட்ட விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை ரயில் பயணிகளிடம், ரயில்வே பாதுகாப்புப் படை வீரா்கள் வழங்கி விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிச்சைப் பாத்திரத்தை கையில் ஏந்தியுள்ளது பாகிஸ்தான் -பிரதமர் மோடி விமர்சனம்

5-ஆம் கட்ட தோ்தல்: ரே பரேலி உள்பட 49 தொகுதிகளில் பிரசாரம் முடிந்தது

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

சக்கரை நிலவே... சம்யுக்தா மேனன்!

SCROLL FOR NEXT