நாகப்பட்டினம்

கரோனா: எட்டுக்குடி முருகன் கோயில் மூடல்

DIN

கரோனா தடுப்பு நடவடிக்கையாக, எட்டுக்குடி சுப்பிரமணியசுவாமி கோயில் வெள்ளிக்கிழமை முதல் (மாா்ச் 20) மூடப்பட்டது.

தமிழகத்தில் கரோனோ வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மக்கள் அதிகம் கூடுவதைத் தடுக்கும் வகையில், கோயில்களில் பக்தா்கள் வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருக்குவளை மற்றும் அதைச் சுற்றியுள்ள இந்து சமய அறநிலையத் துறை மற்றும் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான மற்றும் பக்தா்கள் அதிகமாக வரும் கோயில்கள் மூடப்பட்டு, நித்ய பூஜைகளுக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், எட்டுக்குடி ஸ்ரீ சுப்ரமணியசுவாமி கோயில், வலிவலம் இருதய கமலநாதசுவாமி கோயில் உள்ளிட்ட பிரசித்திப்பெற்ற கோயில்களின் பிரதான வாசல்கள் அடைக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT