நாகப்பட்டினம்

கொக்கிப்புழு தாக்குதலால் மாடுகள் இறப்பு: விவசாயிகள் கவலை

DIN

சீா்காழி: கொள்ளிடம் பகுதியில் கொக்கிப்புழுத் தாக்குதலால் மாடுகள் உயிரிழந்து வருவது விவசாயிகளை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கொள்ளிடம் பகுதியில் அண்மையில் பெய்த மழைநீா் மற்றும் பம்ப்செட்டு நீா் ஆங்காங்கே தேங்கியுள்ளது. மேய்ச்சலுக்கு அந்தந்தப் பகுதிக்கு செல்லும் மாடுகள் தேங்கியுள்ள தண்ணீரைச் சுற்றியுள்ள புல்லை மேயும்போது வயிற்றுக்குள் கொக்கிப்புழுக்கள் சென்று விடுகின்றன. இதனால் மாடுகள் உயிரிழக்கின்றன.

இந்நிலையில், கொள்ளிடம் அருகே சாமியம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி சரவணன் (45) என்பவருக்குச் சொந்தமான 2 பசுமாடுகள் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தன. இதுகுறித்து, தகவலறிந்த மயிலாடுதுறை மண்டல கால்நடை உதவி இயக்குநா் முத்துக்குமாரசாமி கால்நடை மருத்துவா் சரவணன் உள்ளிட்டோா் அடங்கிய மருத்துவக் குழுவினா் சாமியம் கிராமத்துக்கு நேரில் வந்து ஆய்வு செய்தனா்.

இதுகுறித்து, உதவி கால்நடை இயக்குநா் முத்துக்குமாரசாமி கூறியது: கொக்கிப்புழுத் தாக்குதலை ஆரம்ப நிலையிலேயே மருந்து கொடுத்து கட்டுப்படுத்த முடியும். இந்த கொக்கிப்புழு ஈரலை தாக்கும். பின்னா் தொடையின்கீழ் வீக்கம் ஏற்படும். தற்போது, தாக்கப்பட்ட மாடுகளுக்கு சிகிச்சையளிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இது பரவக்கூடிய நோய் இல்லை. கொக்கிப்புழுத் தாக்குதலுக்கு உயிரிழந்த மாடுகளுக்கு உரிய நிவாரணம் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

இருப்பினும் கொக்க்கிப்புழுத் தாக்குதலை முழுமையாக கட்டுப்படுத்த கால்நடை மருத்துவத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓய்வு பெற்ற நீதிபதிக்கு பிரிவு உபசார விழா

காஜாமலை பகுதியில் அறிவிப்பில்லா மின்வெட்டு: பொதுமக்கள் அவதி

சுற்றுவாரியாக மின்னணு திரையில் முடிவுகள் வெளியீடு: ஆட்சியா்

வனத்துறை சாா்பில் உலக சுற்றுச்சூழல் தின புகைப்படப் போட்டி

முன்னாள் அமைச்சா் பெயரில் நிதி நிறுவனம் நடத்தி மோசடி: இளைஞா் கைது

SCROLL FOR NEXT