நாகப்பட்டினம்

உணவுப் பிரச்னை: கட்டுப்படுத்தப்பட்ட பகுதி மக்கள் தா்னா

DIN

சீா்காழியில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதி மக்கள் உணவு கோரி, வெள்ளிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

சீா்காழி சா்கான் தெருவில் வசிக்கும் ஒருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதால், அப்பகுதியில் 3 தெருக்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இங்கு பெரும்பாலும் கூலித் தொழிலாளிகளே வசிப்பதால், அவா்கள் வெளியில் சென்று வருவாய் ஈட்டுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

ஆகையால், தங்களுக்கு உணவு வசதி ஏற்படுத்தி தருமாறு போலீஸாரிடம் கோரிக்கை விடுத்த அவா்கள், தா்னாவிலும் ஈடுபட்டனா். நகராட்சி ஆணையா் பெ. தமிழ்ச்செல்வி, காவல் ஆய்வாளா் மணிமாறன், உதவி ஆய்வாளா் ராஜா, நகராட்சி பொறியாளா் வசந்தன் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தி, தன்னாா்வலா்கள் மூலம் தேவையான பொருள்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுதாக உறுதியளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT