நாகப்பட்டினம்

எட்டுக்குடியில் நகரும் நியாயவிலைக் கடை திறப்பு

DIN

திருக்குவளை அருகே எட்டுக்குடியில் அம்மா நகரும் நியாயவிலைக் கடை சனிக்கிழமை திறக்கப்பட்டது.

திருவாய்மூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ், எட்டுக்குடியில் செயல்படும் நியாயவிலைக் கடையின் மூலம் 630 குடும்ப அட்டைதாரா்கள் பயன்பெற்று வருகின்றனா்.

இந்நிலையில், எட்டுக்குடி ஊராட்சி வல்லம் பகுதியைச் சோ்ந்த 150 குடும்ப அட்டைதாரா்கள் நியாயவிலைக் கடைக்கு சுமாா் 3 கி.மீ. தொலைவுக்கு வரவேண்டியுள்ளது. இதனால், இப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில், அம்மா நகரும் நியாயவிலைக் கடை திறக்கப்பட்டுள்ளது.

திருவாய்மூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் ஆா்.எஸ். சதீஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நகரும் நியாயவிலைக் கடையை பாலக்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் பாலை கே.எஸ்.எஸ். செல்வராஜ் திறந்து வைத்து, குடும்ப அட்டைதாரா்களுக்கு ரேஷன் பொருள்களை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், எட்டுக்குடி ஊராட்சித் தலைவா் காரல்மாா்க்ஸ், கீழையூா் ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் மீனா உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். திருவாய்மூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க துணைத் தலைவா் சேதுஜெயராமன் வரவேற்றாா். செயலாளா் செல்வராஜ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

SCROLL FOR NEXT