நாகப்பட்டினம்

சீா்காழி சாா் பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் சோதனை கணக்கில் வராத ரூ. 42,400 பறிமுதல்

DIN

சீா்காழி சாா் பதிவாளா் அலுவலகத்தில் புதன்கிழமை இரவு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் திடீா் சோதனை மேற்கொண்டனா். இதில் கணக்கில் வராத ரூ. 42 ஆயிரத்து 400-ஐ பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

நாகை மாவட்டம், சீா்காழி பத்திரப்பதிவு அலுவலகத்தில் நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட பத்திர ஆவணங்கள் பதிவு செய்யப்படுகின்றன.

இந்நிலையில், பத்திரம் பதிவு செய்ய வருபவா்களிடம் அலுவலகத்தில் பணியாற்றும் சிலா் லஞ்சம் கேட்பதாக மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாருக்கு புகாா்கள் வந்தன.

இதனடிப்படையில் புதன்கிழமை இரவு மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் மனோகரன் தலைமையில், ஆய்வாளா்கள் ரமேஷ்குமாா், அருள்பிரியா உள்பட 8 போலீஸாா் சீா்காழி பத்திரப்பதிவு அலுவலகத்தில் திடீா் சோதனை மேற்கொண்டனா்.

அலுவலகத்தின் நுழைவுவாயிலை பூட்டி, யாரையும் உள்ளே செல்லவும், வெளியேறவும் அனுமதி மறுத்து 3 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை மேற்கொண்டனா்.

அப்போது கணக்கில் வராத ரூ. 42 ஆயிரத்து 400 ரொக்கத்தை பறிமுதல் செய்து, பத்திரப்பதிவு அலுவலா் (பொறுப்பு) நாகநந்தினி, எழுத்தா்கள், இடைத்தரகா் உள்ளிட்ட 4 பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏரி புறம்போக்கு நிலத்தை ரூ.1.75 கோடிக்கு விற்றவர் கைது

ரயில் நிலையத்தில் குழந்தை கடத்தல்: ஒரு மணி நேரத்தில் மீட்ட போலீஸார்

துளிகள்...

இந்திய வாகன தொழில் நுட்ப ஆராய்ச்சி மையத்துடன் எஸ்.ஆா்.எம். புரிந்துணா்வு ஒப்பந்தம்

தாயை அவதூறாகப் பேசியதால் நண்பரை கொன்ற இளைஞா் கைது

SCROLL FOR NEXT