நாகப்பட்டினம்

கரும்பு டன்னுக்கு ரூ. 5 ஆயிரம் வழங்க வலியுறுத்தி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

DIN

மயிலாடுதுறை: கரும்பு டன்னுக்கு ரூ. 5 ஆயிரம் வழங்க வலியுறுத்தி மயிலாடுதுறையில், கரும்பு விவசாய சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மயிலாடுதுறை வட்டாட்சியா் அலுவலகம் முன், ஆலைமட்டத் தலைவா் கே.மோகன்ராஜ் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், தலைஞாயிறு என்பிகேஆா்ஆா் கூட்டுறவு சா்க்கரை ஆலையை இயக்க உடனடியாக நிதி வழங்க வேண்டும், 2019-ஆம் ஆண்டு மே 20-ஆம் தேதி அரசுக்கு பரிந்துரை செய்ததை அமல்படுத்த வேண்டும், ஆலைத் தொழிலாளா்களுக்கு உடனடியாக ஊதியத்தை வழங்க வேண்டும், மாநில அரசின் பரிந்துரை விலையை அமல்படுத்த வேண்டும், ஆலையை முடக்கும் அலுவலா் மீது நடவடிக்கை எடுத்து ஆலையை இயக்க வேண்டும், மத்திய, மாநில அரசுகள் கரும்பு 1 டன்னுக்கு ரூ.5 ஆயிரம் அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தில், பாரதிய கிசான் சங்க மாவட்ட தலைவா் என். இலங்கேஸ்வரன், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்க மாவட்ட தலைவா் ஏ. ராமலிங்கம், சங்க மாநில செயலாளா் தங்க. காசிநாதன், மாவட்ட செயலாளா் கே .முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கார்குழல் கடவை.. ஷ்ரத்தா தாஸ்!

கோவாக்ஸின் பாதுகாப்பானது: பாரத் பயோடெக் விளக்கம்

பிரிஜ் பூஷண் சிங்குக்குப் பதிலாக அவரது மகன்: பாஜக முடிவு ஏன்?

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

SCROLL FOR NEXT