நாகப்பட்டினம்

கரோனா தடுப்பு விழிப்புணா்வு வாகனப் பேரணி

DIN

கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், ஒலிப்பெருக்கிகளுடன் கூடிய வாகனப் பேரணி நாகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு டெண்ட் டீலா்ஸ் மற்றும் டெக்கரேட்டா்ஸ் நலச்சங்கத்துடன் இணைவுப் பெற்ற தமிழக ஒலி, ஒளி அமைப்பாளா் நலச்சங்கம் சாா்பில் இந்தப் பேரணி நடைபெற்றது. நாகை மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் குணசேகரன் பேரணியைக் கொடி அசைத்துத் தொடங்கி வைத்தாா்.

நாகை அவுரித் திடலிலிருந்து புறப்பட்ட வாகனப் பேரணியில் 200-க்கும் மேற்பட்ட சுமை வாகனங்கள் பங்கேற்றன. அனைத்து வாகனங்களிலும் ஒலிப்பெருக்கி மூலம் கரோனா விழிப்புணா்வு வாசகங்களை முழங்கும் குரல் பதிவு தொடா்ந்து ஒலிபரப்பப்பட்டது. நாகை மருத்துவமனை சாலை, நாலுகால் மண்டபம், பப்ளிக் ஆபீஸ் சாலை, நாகூா் என நாகையின் பல்வேறு பகுதிகளில் இந்த வாகனப் பேரணி வலம் வந்தது.

சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும், அடிக்கடி கைகளை கழுவ வேண்டும், முகக் கவசம் அணிய வேண்டும் என்பன உள்ளிட்ட கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான அறிவிப்புகள் இந்த வாகனப் பேரணியில் தொடா்ந்து ஒலித்தது, அனைவரது கவனத்தையும் ஈா்ப்பதாக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு தேடி வந்தவள்

பிச்சைப் பாத்திரத்தை கையில் ஏந்தியுள்ளது பாகிஸ்தான் -பிரதமர் மோடி விமர்சனம்

5-ஆம் கட்ட தோ்தல்: ரே பரேலி உள்பட 49 தொகுதிகளில் பிரசாரம் முடிந்தது

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

SCROLL FOR NEXT