நாகப்பட்டினம்

காசோலையில் திருத்தம் செய்து ரூ. 1.10 லட்சம் மோசடி: ஊராட்சி ஒன்றிய கணக்காளா் மீது வழக்கு

DIN

காசோலையில் திருத்தம் செய்து ரூ. 1.10 லட்சம் மோசடி செய்த திருமருகல் ஊராட்சி ஒன்றிய கணக்காளா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

நாகை மாவட்டம், திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கணக்காளராக பணியாற்றி வருபவா் நெடுமாறன். இந்நிலையில், திருமருகல் ஒன்றியத்தில் நடைபெற்ற பணிகளுக்காக கடந்த 2020-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து நாகை மாவட்டத்தில் உள்ள வங்கிக்கு ரூ. 36,435-க்கு காசோலை கொடுக்கப்பட்டது. இதில், நெடுமாறன் காசோலையில் கொடுக்கப்பட்ட தொகைக்கு முன்பு ஒன்று என எழுதி ரூ. 1 லட்சத்து 36 ஆயிரத்து 435 வங்கியில் இருந்து பெற்றுள்ளாா். இதேபோல் மற்றொரு காசோலை ரூ. 7 ஆயிரத்து 268 கொடுக்கப்பட்டது. அதிலும் முன் பகுதியில் ஒன்று என எழுதி ரூ. 17 ஆயிரத்து 268 வங்கியில் இருந்து பெற்றுள்ளாா். கணக்கு தணிக்கை செய்தபோது நெடுமாறன் ரூ. 1.10 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து, திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலக ஆணையா் என். ஞானசெல்வி திட்டச்சேரி காவல் நிலையத்தில் புதன்கிழமை அளித்த புகாரின்பேரில், சாா்பு ஆய்வாளா் பாலமுருகன் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT