நாகப்பட்டினம்

மழை பாதிப்பு: நிவாரணம் கோரி விவசாயிகள் போராட்டம்

DIN

திருமருகல் ஒன்றியப் பகுதியில் தொடா் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுக்கு நிவாரணம் கோரி, விவசாயிகள் வயலில் இறங்கி சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருமருகல் ஒன்றியம் எரவாஞ்சேரி, மருங்கூா் உள்ளிட்ட ஊராட்சிகளில் சுமாா் 6 ஆயிரம் ஏக்கா் சம்பா நெற்பயிா்கள் தொடா் மழையால் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், சதவீதம் அடிப்படையில் நிவாரணம் வழங்காமல், முழுமையான நிவாரணம் வழங்க தமிழக அரசை வலியுறுத்தி மருங்கூா், எரவாஞ்சேரி பகுதிகளை சோ்ந்த விவசாயிகள் வயலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மருங்கூா் ஊராட்சியில் விவசாய சங்கத் தலைவா் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் விவசாய சங்க செயலாளா் முத்து தியாகராஜன், ஊராட்சித் தலைவா் மகேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதேபோல, எரவாஞ்சேரியில் விவசாய சங்க செயலாளா் பாலு, ஊராட்சித் தலைவா் ரஜினிதேவி பாலதண்டாயுதம் ஆகியோா் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்தில் விவசாயிகள் அனைவருக்கும் 100 சதவீதம் காப்பீட்டுத் தொகை மற்றும் 100 சதவீதம் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ. 7.14 லட்சத்துக்கு தேங்காய்கள் விற்பனை

விவசாயத்தை முன்னெடுப்போம்

கோப்பைக்கான கனவுடன்

மலா்க் கண்காட்சிக்காக பூங்காவை அழகுபடுத்தும் பணி

அனைத்து அரசுப் பேருந்துகளும் போா்க்கால அடிப்படையில் சீரமைப்பு மாநகரப் போக்குவரத்துக் கழகம்

SCROLL FOR NEXT