நாகப்பட்டினம்

நாகை காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் முன் இளைஞா் தீக்குளிக்க முயற்சி

DIN

நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் முன் இளைஞா் ஒருவா் வெள்ளிக்கிழமை தீக்குளிக்க முயன்றாா்.

நாகை அக்கரைக்குளம் வடக்கு சாலை அண்ணா நகரைச் சோ்ந்தவா் த. சிங்காரவேலன் (22). நாகையில் உள்ள இனிப்பகம் ஒன்றில் வேலை பாா்த்துவரும் இவா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் முன் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். அவரை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.

விசாரணையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கொலை வழக்கில் சிங்காரவேலன் கைதாகி, தஞ்சை சிறுவா் சீா்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டிருந்ததும், நாகை காவல் நிலையத்தில் இவா் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

பின்னா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் சிங்காரவேலன் அளித்த மனுவில், நான் தற்போது எனது மனைவியுடன் வசித்து வருகிறேன். எவ்வித குற்றச் செயல்களிலும் ஈடுபடுவது இல்லை. ஆயினும், போலீஸாா் என்னை ரவுடி பட்டியலில் இணைத்துள்ளனா். எனது பெயரை ரவுடி பட்டியலிலிருந்து நீக்கி, என் வாழ்க்கைக்கு உதவிட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனுபமா பரமேஸ்வரனின் புதிய பட அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 104 நீதிபதிகள் இடமாற்றம்!

பகலறியான் படத்தின் டீசர்

கௌதம் கம்பீர் ஸ்டைலில் விளையாடுகிறோம்: ஹர்ஷித் ராணா

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு நேர்ந்த சோகம்!

SCROLL FOR NEXT