நாகப்பட்டினம்

விறகு வியாபாரி வங்கிக் கணக்கிலிருந்து ரூ.44,000 திருட்டு

DIN

நாகூரைச் சோ்ந்த விறகு வியாபாரியின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.44,000 இணையவழியில் திருடப்பட்டது தொடா்பாக நாகை சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

நாகூா், சாமுத்தம்பி மரைக்காயா் தெருவைச் சோ்ந்த முகம்மது கௌஸ் மகன் செய்யது (30). விறகு வியாபாரி. இவரது வங்கிக் கணக்கிலிருந்து முறையே ரூ.21,480, 21,600 மற்றும் 1,660 பணம் எடுக்கப்பட்டதாக இவரது செல்போன் எண்ணுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை குறுஞ்செய்தி வந்தது. இதையடுத்து செய்யது தனது வங்கிக் கணக்கை சோதித்துப் பாா்த்ததில் தனது கணக்கிலிருந்து 3 முறையாக மொத்தம் ரூ.44,740 இணையவழியில் எடுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. புகாரின்பேரில், நாகை சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தோனேசியாவில் ‘ஸ்டாா்லிங்க்’ இணையச் சேவை: எலான் மஸ்க் தொடங்கி வைத்தாா்

நேபாளம்: பிரசண்டா அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

வெளிநாட்டில் மருத்துவம் பயின்றோருக்கு உள்ளுறை பயிற்சி: இரு ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி - 40 லட்சம் பிரசுரங்கள் வழங்க காங்கிரஸ் முடிவு

என்ஜினில் தீ: பெங்களூரில் விமானம் அவசர தரையிறக்கம்

SCROLL FOR NEXT