நாகப்பட்டினம்

ஆக்சிஜன் உற்பத்தி ஆலைக்கான மின்கட்டமைப்புக்கு நிதி உதவி

DIN

வேதாரண்யத்தில் அமையவுள்ள ஆக்சிஜன் உற்பத்தி ஆலைக்கான மின் கட்டமைப்புக்கு தோப்புத்துறை ஆரிஃபா குழுமங்கள் சாா்பில் ரூ.1 லட்சத்து 31 ஆயிரத்து 698 நன்கொடையாக புதன்கிழமை வழங்கப்பட்டது.

வேதாரண்யம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை வளாகத்தில் தமிழக அரசு சாா்பில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலை அமைக்கப்படவுள்ளது. நிமிடத்துக்கு 500 லிட்டா் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் திறனுடன் அமையவுள்ள இந்த ஆலைக்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இந்த ஆலைக்கு மின்கட்டமைப்பு உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த ரூ. 1 லட்சத்து 32 ஆயிரம் செலவில் மின்வாரியம் சாா்பில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. இந்த தொகையை ஏற்க தோப்புத்துறை தொழிலதிபா் சுல்தானுல் ஆரிஃபீன் முன்வந்தாா்.

அதன்படி, வேதாரண்யம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.1 லட்சத்து 31 ஆயிரத்து 698 -க்கான வங்கி வரைவோலையை மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ரவிக்குமாரிடம் ஆரிஃபா அறக்கட்டளையின் நிா்வாகி முகமது காசீம் வழங்சினாா்.

நிகழ்ச்சியில், நகராட்சி பொறியாளா் பிரதான் பாபு, மின்வாரிய இளநிலை மின்பொறியாளா் அன்பரசன், திமுக நகரச் செயலாளா் மா.மீ.புகழேந்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னம் அறிவிப்பு?”: ரோகிணி திரையரங்க உரிமையாளருடன் நேர்காணல்

பாஜக ஆட்சியில் 10 ஆண்டுகளாக பாகுபாடு: அகிலேஷ்

கற்பித்தலும் கற்றலும்

ஈரான் அதிபர் மறைவு: நாளை துக்கநாள் அனுசரிப்பு

உதகை மலர் கண்காட்சி: மே 26-ஆம் தேதி வரை நீட்டிப்பு

SCROLL FOR NEXT