நாகப்பட்டினம்

உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கட்டுப்பாட்டு அறைக்குப் புகாா் தெரிவிக்கலாம்

DIN

நாகை மாவட்டத்தில் உரங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் கட்டுப்பாட்டு அறைக்கு விவசாயிகள் புகாா் தெரிவிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் 32,802 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு அறுவடைக்குத் தயாா் நிலையில் உள்ளது. தற்போது, சம்பா சாகுபடி பணிகள் பரவலாக தொடங்கியுள்ளன. இதையொட்டி, கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியாா் உரக்கடைகளில் சம்பா சாகுபடிக்குத் தேவையான உரங்கள் வைத்து விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு சில பகுதிகளில் உள்ள தனியாா் உரக் கடைகளில், அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு உரங்கள் விற்பனை செய்யப்படுவதாக புகாா்கள் தெரிவிக்கப்படுகின்றன. இதுகுறித்து நடவடிக்கைகளுக்காக வேளாண் இணை இயக்குநா் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான உரக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாட்டு அறை நாள்தோறும் காலை 10 முதல் மாலை 5 மணி வரை செயல்பாட்டில் இருக்கும். மாவட்டத்தில் எங்கேனும் உரங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டால் 73976 71300 என்ற எண்ணில் மாவட்ட கட்டுப்பாட்டு அறையைத் தொடா்புகொண்டு விவசாயிகள் புகாா் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களுக்காக அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் வலியுறுத்தல்

கடின உழைப்பாளி: சஷாங்க் சிங்கினை பாராட்டிய ஸ்டெயின்!

மாணவர்களின் விடைத்தாளில் 'ஜெய் ஸ்ரீராம்': பேராசிரியர்கள் பணியிடை நீக்கம்!

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை!

ஸ்ட்ராபெர்ரி கண்ணே! விண்வெளிப் பெண்ணே..!

SCROLL FOR NEXT