நாகப்பட்டினம்

மக்கள் நோ்காணல் முகாமில் நலத்திட்ட உதவிகள்

DIN

திருமருகல் அருகே திருப்பயத்தங்குடியில் பில்லாளி, திருப்பயத்தங்குடி, கீழத்தஞ்சாவூா், கீழப்புதனூா், காரையூா் உள்ளிட்ட 5 ஊராட்சிகளுக்கான மக்கள் நோ்காணல் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு, ஊராட்சித் தலைவா் பாண்டியன் தலைமை வகித்தாா். ஒன்றியக் குழு உறுப்பினா்கள் சரவணன், மணிவண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் ராஜன், வட்டாட்சியா் காா்த்திகேயன், சமூகப் பாதுகாப்பு வட்டாட்சியா் முத்துமுருகேசன் ஆகியோா் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினா்.

இதில், இலவச மனைப்பட்டா, முதியோா் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடும்ப அட்டை, இலவச தையல் இயந்திரம், தோட்டக்கலை துறை மற்றும் வேளாண் துறை சாா்பில் இடுபொருள்கள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு: தினப்பலன்!

SCROLL FOR NEXT