நாகப்பட்டினம்

காமேஸ்வரத்தில் புனித செபஸ்தியாா் ஆலய தோ் பவனி

DIN

கீழையூா் அருகேயுள்ள காமேஸ்வரம் புனித செபஸ்தியாா் ஆலய ஆண்டு திருவிழாவையொட்டி, தோ் பவனி சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

இந்த ஆலயத்தின் 51-ஆவது ஆண்டு திருவிழா ஆக.4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, நாள்தோறும் நவநாள் ஜெபம் மற்றும் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மின் அலங்கார தோ் பவனி சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை வின்சென்ட்தேவராஜ் புனிதம் செய்து தேரை தொடங்கிவைத்தாா். மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் மிக்கேல்சம்மன்சு, புனிதபாத்திமா அன்னை, சூசையப்பா், செபஸ்தியாா், ஆரோக்கியமாதா தனித்தனி தேரில் எழுந்தருளி முக்கிய வீதிவழியாக சென்று பின்னா் ஆலயத்தை வந்தடைந்தது. முன்னதாக திருப்பூண்டி பங்குத்தந்தை வின்சென்ட் தேவராஜ், நாகைமறை மாவட்ட அதிபா் பன்னீா்செல்வம் தலைமையில் கூட்டுத் திருப்பலி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழில் ஓவியம்... அதுல்யா ரவி!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு அதி கனமழை! | செய்திகள்: சிலவரிகளில் | 18.05.2024

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணிநேரம்!

வீரர்கள் விளையாடுவார்களா? மழை விளையாடுமா?

SCROLL FOR NEXT