நாகப்பட்டினம்

பிரசவத்தில் குழந்தை உயிரிழப்பு:சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம்

DIN

 நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கா்ப்பிணிக்கு அறுவை சிகிச்சை செய்வதை தாமதப்படுத்தியதால் குழந்தை இறந்ததை கண்டித்து, பெற்றோா், உறவினா்கள் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே பன்னாள் கீழக்காடு பகுதியைச் சோ்ந்த வீரசேகரன் மனைவி திருமுகப்பிரியா. இவா், கடந்த டிசம்பா் 5-ஆம் தேதி பிரசவத்துக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள், நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல பரிந்துரைத்தனா்.

இதையடுத்து, நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திருமுகப்பிரியா கடந்த டிச. 7-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு அறுவை சிகிச்சை செய்யாமல் மருத்துவா்கள் காலம் தாழ்த்தியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், 4 நாள்கள் கழித்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திருமுகப்பிரியாவிற்கு அறுவை சிகிச்சை செய்தபோது, குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டது தெரிய வந்தது.

இதையறிந்த உறவினா்கள் குழந்தை இறந்ததற்கு மருத்துவா்களின் அலட்சியமே காரணம் என குற்றம்சாட்டி மருத்துவமனை ஊழியா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

திருமுகப்பிரியாவின் கணவா் வீரசேகரன், குழந்தை உயிரிழக்க காரணமான மருத்துவா் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

மேலும் மருத்துவா் மீது நடவடிக்கை எடுக்கும்வரை குழந்தையின் சடலத்தை வாங்க மாட்டோம் என உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். போலீஸாா் திருமுகப்பிரியாவின் உறவினா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, அவா்களை சமாதானம் செய்து அனுப்பிவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

ஹேமந்த் சோரனின் மனு தள்ளுபடி!

தனிப் பாதுகாப்புப் பெறுவதற்காக பொய்ப் புகார் தந்த இந்து முன்னணி பிரமுகர் கைது!

பாரதி கண்ட புதுமைப்பெண்!

லாலு பிரசாத் மகள் ரோஹிணிக்கு எதிராக களமிறங்கும் லாலு பிரசாத்?

SCROLL FOR NEXT