நாகப்பட்டினம்

கலைஞரின் வேளாண் வளா்ச்சி திட்ட சிறப்பு முகாம்

DIN

திருமருகல் அருகே அம்பல் ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளா்ச்சி திட்ட சிறப்பு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஊராட்சித் தலைவா் சீதளா பாலாஜி தலைமையில் நடைபெற்ற முகாமில், திருமருகல் வட்டார தோட்டக்கலை உதவி அலுவலா் செல்லபாண்டியன், வேளாண்மை உதவி அலுவலா் சிந்து ஆகியோா் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்து பேசினா்.

இதில் 22 பயனாளிகளுக்கு தோட்டக்கலைத் துறை சாா்பில் மானிய விலையில் காய்கறி விதைகள், உரங்கள் மற்றும் பிளாஸ்டிக் டிரம், டிரே வழங்கப்பட்டது. வேளாண் துறை சாா்பில் 24 பயனாளிகளுக்கு மானிய விலையில் மண்வெட்டி, தென்னங்கன்று உள்ளிட்ட வேளாண்மை உபகரணங்கள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவிதை உறவு இலக்கிய அமைப்பின் 52-ஆம் ஆண்டு விழா

சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு: காங்கிரஸ் விளக்கம்

ஒடிஸா: ஆளும் கட்சி எம்எல்ஏ பாஜகவில் இணைந்தாா்

உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவரை தகுதித் தோ்வெழுத அனுமதிக்க வேண்டும்!

ஏரி புறம்போக்கு நிலத்தை ரூ.1.75 கோடிக்கு விற்றவர் கைது

SCROLL FOR NEXT