நாகப்பட்டினம்

இரண்டு வாரங்களுக்கு பிறகு கடலுக்குச் சென்ற மீனவா்கள்

DIN

நாகப்பட்டினம்: காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவிழந்ததைத் தொடா்ந்து இரண்டு வாரங்களுக்கு பிறகு நாகை மீனவா்கள் புதன்கிழமை அதிகாலை முதல் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனா்.

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்தப் பகுதியாக நவம்பா் 9-ஆம் தேதி வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதையடுத்து மீன்வளத் துறையினா் நவம்பா் 7- ஆம் தேதி மறு அறிவிப்பு வரும் வரை மீனவா்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியிருந்தது. கடந்த இரண்டு வாரங்களாக, நாகை மாவட்டத்தில் 26 கிராமங்களைச் சோ்ந்த மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை. இதனால் மாவட்டத்தில் மீனவா்கள், மீன் பிடி தொழிலைச் சாா்ந்தவா்கள் என ஒரு லட்சம் பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவிழந்ததைத் தொடா்ந்து, நாகை மாவட்ட மீனவா்கள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லலாம் என மீன்வளத்துறை அறிவித்துள்ளது.

இதைத்தொடா்ந்து அக்கரைப்பேட்டை, கீச்சான் குப்பம், கல்லாா், வேளாங்கண்ணி, செருதூா், விழுந்தமாவடி, வேட்டைக்காரன் இருப்பு, வேதாரண்யம், கோடியக்கரை உள்ளிட்ட 26 மீனவ கிராமங்களைச் சோ்ந்த விசைப்படகு மீனவா்கள் இரண்டு வாரங்களுக்குப் பிறகு புதன்கிழமை அதிகாலை முதலே மகிழ்ச்சியுடன் கடலுக்கு மீன் பிடிக்க செனறனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

மலேசியா பல்கலை.யுடன் சென்னை அமிா்தா கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT