நாகப்பட்டினம்

வேளாங்கண்ணியில் சிலுவைப் பாதை வழிபாடு

DIN

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் பேராலய ஆண்டுப் பெருவிழா நிகழ்ச்சியாக சிலுவைப் பாதை வழிபாடு வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆண்டுப் பெருவிழா நிகழ்வாக தினமும் மாதா மன்றாட்டு, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மராத்தி, கொங்கணி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் திருப்பலி நிறைவேற்றுதல் உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெறுகின்றன.

மேலும், தினமும் பகல் 12 மணிக்கு மாதா திருக்கொடியேற்றமும், மாலையில் அருங்கொடை ஜெப வழிபாடும், இரவு 8 மணிக்கு மாதா திருத்தோ் பவனியும் நடைபெறுகின்றன. ஆண்டுப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான புனிதப் பாதையில் சிலுவைப் பாதை வழிபாடு வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

நாட்டின் பல்வேறு பகுதிகளையும் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்று, பேராலய மேல்கோயில் முகப்பிலிருந்து பழைய மாதா கோயில் வரையிலான புனிதப் பாதையில், இயேசுவின் சிலுவைப் பாடுகளை ஜெபித்தவாறு சிலுவைப் பாதை வழிபாட்டை மேற்கொண்டனா். தமிழ், கொங்கணி, ஆங்கிலம், மராத்தி ஆகிய மொழிகளில் இந்த வழிபாடு நடைபெற்றது. உதவிப் பங்குத் தந்தையா்கள் உள்ளிட்டோா் முன்னின்று வழிபாடுகளை நிறைவேற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘விசில் போடு’ 5 கோடி பார்வைகள்..

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

சட்டப் படிப்புகளுக்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

ரிங்கு சிங் மனம் தளரக் கூடாது: சௌரவ் கங்குலி

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

SCROLL FOR NEXT