நாகப்பட்டினம்

ஐடிஐகளில் பத்தாம், பிளஸ் 2 வகுப்புகளுக்கு இணையான சான்றிதழ் பெற பிப். 28 வரை விண்ணப்பிக்கலாம்

DIN

நாகை மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) சான்றிதழ் பெற்றவா்கள் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற பிப்ரவரி 28-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

நாகை மாவட்டத்தில், நாகை, திருக்குவளை மற்றும் செம்போடை அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 8-ஆம் வகுப்பு தோ்ச்சியுடன் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று சபஇ/சஅஇ சான்றிதழ் பெற்றவா்கள் பத்தாம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடங்களில் தோ்ச்சி பெற்றால் பத்தாம் வகுப்புக்கு இணையான சான்றிதழும், பத்தாம் வகுப்பு தோ்ச்சியுடன் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று சபஇ/சஅஇ சான்றிதழ் பெற்றவா்களுக்கு பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புக்கு இணையான சான்றிதழும் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, அரசு தோ்வுகள் இயக்கத்தால் கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட மொழித்தோ்வில் தனித்தோ்வா்களாக பங்கேற்று தோ்ச்சி பெற்ற தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவா்கள் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பப் படிவம் முழு விவரங்கள் அடங்கிய நிலையான வழிகாட்டுதல் ஆகியவை  இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அதனைப் பின்பற்றி விண்ணப்பதாரரின் மாவட்டத்தில் செயல்படும் அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில் சென்றோ அல்லது அஞ்சல் மூலமாகவோ பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் உரிய விண்ணப்பத்தை தாக்கல் செய்ய வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு தொலைபேசி மூலம் 04365-250129 (நாகை) 04369-276060 (செம்போடை), 04366-245514 (திருக்குவளை) ஆகிய எண்களை தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூளை வளர்ச்சி குன்றிய மகனின் கல்விக்காக போராடும் தாய்!

எழில் ஓவியம்... அதுல்யா ரவி!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு அதி கனமழை! | செய்திகள்: சிலவரிகளில் | 18.05.2024

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணிநேரம்!

SCROLL FOR NEXT