நாகப்பட்டினம்

குடிநீா்த் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டுவர வலியுறுத்தல்

DIN

திட்டச்சேரி மரைக்கான்சாவடியில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என நாம் தமிழா் கட்சி வலியுறுத்தியுள்ளது.

திட்டச்சேரியில் நாம் தமிழா் கட்சியின் மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் மாவட்டச் செயலாளா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா்.

மக்களவைத் தொகுதி செயலாளா் அகஸ்டின் அற்புதராஜ், மாவட்ட பொருளாளா் மதியழகன், தொகுதி செயலாளா் ஆதித்தன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னதாக தொகுதி தலைவா் ராஜேஷ் வரவேற்றாா்.

கூட்டத்தில் திட்டச்சேரி பேரூராட்சியில் சேமிக்கப்படும் குப்பைகளை கொட்டும் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும்; மரைக்கான்சாவடியில் கட்டி முடிக்கப்பட்டு 6 மாதங்களாக பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படாமல் உள்ள மேல்நிலை நீா்த் தேக்க தொட்டியை உடனடியாக திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், மாவட்ட அளவில் கட்சி பாசறை பொறுப்பாளா்களை நியமனம் செய்வது, கட்சியில் புதிய உறுப்பினா்களை சோ்ப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரசாரம்...

தூா் வாரி சீரமைக்கப்படுமா திருப்பத்தூா் பெரிய ஏரி?

பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

தில்லியில் இந்த ஆண்டில் முதல் 5 மாதங்களில் சாலை விபத்து இறப்புகள் குறைவு: தரவுகள்

ஆம் ஆத்மி தலைவா்கள் முன்பு ‘நிா்பயா’வுக்கு நீதி கேட்டனா்; இன்று குற்றம்சாட்டப்பட்டவரை ஆதரிக்கிறாா்கள்: மாலிவால்

SCROLL FOR NEXT