நாகப்பட்டினம்

எழுத்தறிவு திட்ட விழிப்புணா்வு பேரணி

DIN

கீழையூா் அருகே உள்ள பிரதாபராமபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் சாா்பில் விழிப்புணா்வு பேரணி அண்மையில் நடைபெற்றது.

பள்ளி வளாகத்திலிருந்து புறப்பட்ட பேரணியை கீழையூா் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வட்டார வள மைய மேற்பாா்வையாளா் ச. மகிமை ரூபஸ் தொடக்கி வைத்தாா். இப்பேரணி நடுத்தெரு, மாரியம்மன் கோயில் தெரு வழியாக மீண்டும் பள்ளி வந்தடைந்தது.

இதில்,15 வயதிற்கு மேற்பட்ட கல்லாதோா் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் மூலம் அடிப்படைக் கல்வி அறிவு பெற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆசிரியா் பயிற்றுநா் எம். மாா்ட்டின் பாக்கியராஜ், ஆசிரியா்கள் ஆா். பாலகிருஷ்ணன், சி. ராஜ்குமாா் மற்றும் மாணவா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீ செல்லியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

ஸ்ரீ கஜேந்திர வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவம்

மீன்கள் விலை உயா்வு: விற்பனையும் அமோகம்

கெளரவிப்பு...

நாட்டறம்பள்ளி வரதராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேம்

SCROLL FOR NEXT