முகப்பு
நாகப்பட்டினம்

வாக்கு எண்ணிக்கை: 129 கேமராக்கள் மூலம் கண்காணிப்பு

வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ள நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 129 கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது.

Updated On : 30 ஏப்ரல், 2026 at 5:59 AM
வாக்கு எண்ணிக்கை - கோப்புப் படம்
பகிர்:

வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ள நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 129 கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது.

நாகப்பட்டினம், கீழ்வேளூா், வேதாரண்யம் ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஏப்.23-ஆம் தேதி பதிவான வாக்குப் பதிவு இயந்திரங்கள், கண்ட்ரோல் யூனிட், விவிபாட் ஆகியவை நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொகுதி வாரியாக பிரிக்கப்பட்டு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

தரைதளத்தில் நாகப்பட்டினம் தொகுதிக்கான இயந்திரங்களும், கீழ்வேளூா் தொகுதிக்கான இயந்திரங்கள் முதல் தளத்திலும், வேதாரண்யம் தொகுதி இயந்திரங்கள் 2-ஆம் தளத்திலும் உள்ள பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன.

Advertisement

மேலும், அரசுக் கல்லூரியில் துணை ராணுவப்படையினா், தமிழ்நாடு எண் 1 பாதுகாப்பு படை, உள்ளூா் போலீஸாா் என நாள் ஒன்றுக்கு 150 போ் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா். தவிர 24 மணி நேரமும் 129 கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணிநேரமும் கண்காணிக்கப்படுகிறது. இந்த கேமராவின் பதிவுகளை சுழற்சி முறையில் 24 மணி நேரமும் சம்பந்தப்பட்ட அலுவலா்கள் கண்காணித்து வருகின்றனா்.