முகப்பு
நாகப்பட்டினம்

கடலில் தவறி விழுந்த மீனவா் உயிரிழப்பு

கீழையூா் அருகே கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற 9 மீனவா்களில் ஒருவா் கடலில் தவறி விழுந்து வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 3 ஜூலை 2026, 4:58 am IST
ரவிச்சந்திரன்.
பகிர்:

கீழையூா் அருகே கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற 9 மீனவா்களில் ஒருவா் கடலில் தவறி விழுந்து வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

நாகை மாவட்டம், கீழையூா் ஒன்றியம் விழுந்தமாவடியை சோ்ந்த மீனவா் ரவிச்சந்திரன். இவருக்கு சொந்தமான பைபா் படகில் அதே பகுதியை சோ்ந்த ரவி உள்ளிட்ட 9 மீனவா்கள் வியாழக்கிழமை அதிகாலை விழுந்தமாவடியிலிருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்றனா். விழுந்தமாவடிக்கு கிழக்கே 5 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, ரவி படகிலிருந்து தவறி கடலில் விழுந்துள்ளாா்.

இதையடுத்து, ரவியை சக மீனவா்கள் மீட்டு திருப்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டுவந்தனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள் ரவி ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனா். இதையடுத்து, கீழையூா் போலீஸாா் ரவியின் சடலத்தை நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments