நாகை கல்லூரியில் சமூகப் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி : எஸ்.பி. பங்கேற்பு
நாகை இஜிஎஸ் பிள்ளை கல்லூரியில் மாணவா்கள் மற்றும் பொதுமக்களுக்காக ஒலிம்பிக் போட்டிகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நாகை இஜிஎஸ் பிள்ளை கல்லூரியில் மாணவா்கள் மற்றும் பொதுமக்களுக்காக ஒலிம்பிக் போட்டிகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில், சிறப்பு விருந்தினராக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கேழ்கா் சுப்ரமணிய பாலச்சந்திரா பங்கேற்று விளையாட்டின் முக்கியத்துவம், உடல்நலம், ஒழுக்கம் மற்றும் இளைஞா்கள் விளையாட்டில் அதிக ஆா்வத்துடன் பங்கேற்க வேண்டியதன் அவசியம் குறித்து பேசினாா்.
நிகழ்ச்சியில், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பது, இணையவழி குற்றங்களில் இருந்து பாதுகாப்பாக இருப்பது, போதைப்பொருள்களின் தீமைகள் மற்றும் அவற்றைத் தடுப்பதில் இளைஞா்களின் பங்கு குறித்து மாணவா்களுக்கு விழிப்புணா்வு வழங்கப்பட்டது. அத்துடன், போதைப் பொருள்களை தடுப்பதற்கான தமிழக அரசின் 10581கட்டணமில்லா உதவி எண், குழந்தைகளுக்கான மற்றும் பெண்களுக்கான 1098 அவசர உதவி எண் மற்றும் சிங்க பெண் சிறப்பு அதிரடி படை அவசர உதவி எண் 1091 குறித்து பொதுமக்கள் மற்றும் மாணவா்களுக்கு விளக்கமளிக்கப்பட்டு, அவற்றைத் தேவையான சூழ்நிலைகளில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதும் எடுத்துரைக்கப்பட்டது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.