திருவாரூர்

நீடாமங்கலம் பேரூராட்சியில் டெங்கு விழிப்புணர்வு கூட்டம்

DIN

நீடாமங்கலம் பேரூராட்சி பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்  மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
நீடாமங்கலம் அரசினர் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கூட்டத்துக்கு திருவாரூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் டாக்டர் செந்தில்குமார் தலைமை வகித்தார்.
நீடாமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராணி முத்துலட்சுமி, பேரூராட்சி செயல் அலுவலர் ஆர். சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வட்டார சுகாதார ஆய்வாளர் சிவகுமார் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள், பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் மாணவ, மாணவியர்  உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதில் டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கை குறித்த விழிப்புணர்வு கருத்துகள் எடுத்துரைக்கப்பட்டன.  தொடர்ந்து, அனைவருக்கும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT