சதுரங்கவல்லபநாதர் கோயிலில் சித்திரை பெருவிழா தொடக்கம்
நீடாமங்கலம் அருகேயுள்ள பூவனூர் சதுரங்கவல்லபநாதர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் சித்திரைப் பெருவிழா திங்கள்கிழமை தொடங்கியது.
நீடாமங்கலம் அருகேயுள்ள பூவனூர் சதுரங்கவல்லபநாதர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் சித்திரைப் பெருவிழா திங்கள்கிழமை தொடங்கியது.
இதை முன்னிட்டு கற்பகவல்லி, ராஜராஜேஸ்வரி சமேத சதுரங்கவல்லபநாதர், சாமுண்டீஸ்வரி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து மாலை 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் ஐயனார் காப்புக்கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
வரும் 27-ஆம் தேதி வரை 12 நாள்கள் சித்திரைப் பெரு விழா நடைபெறுகிறது. நாள்தோறும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், சுவாமி வீதியுலா புறப்பாடு நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் ஆர். சுகுமார், ஆய்வர் ஏ. ரமணி, செயல் அலுவலர் டி. அரவிந்தன் மற்றும் கோயில் பணியாளர்கள், உபயதாரர்கள் செய்துள்ளனர்.