முகப்பு
திருவாரூர்

ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் சாவு

திருவாரூர் அருகே ஆற்றில் குளிக்கும்போது, நீரில் மூழ்கி கல்லூரி மாணவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். 

Updated On : 8 அக்டோபர் 2018, 7:55 am IST
பகிர்:

திருவாரூர் அருகே ஆற்றில் குளிக்கும்போது, நீரில் மூழ்கி கல்லூரி மாணவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். 
திருவாரூர் அருகே உள்ள கொடிக்கால்பாளையத்தைச் சேர்ந்தவர் இப்ராஹிம். இவரது மகன் சபிபுதீன் (19). இவர் நாகையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இவரது நண்பரான புலிவலத்தைச் சேர்ந்த ஐயப்பன் மகன் அபினாஷும் (20). அதே கல்லூரியில் படித்து வருகிறார்.
இந்நிலையில், இவர்கள் இருவரும் தங்களது நண்பர்களோடு திருவாரூர் அருகே பாண்டவையாற்றின் மருவத்தூர் சட்ரெஸ் அருகே குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது ஆற்றில் ஏற்பட்ட திடீர் சுழலில் இருவரும் சிக்கிக்கொண்டனராம். அவர்களின் சத்தம் கேட்டு, அப்பகுதியில் இருந்த மக்கள், இருவரையும் மீட்க முயற்சித்தனர். ஆனால், அபினாஷை மட்டுமே உயிருடன் மீட்க முடிந்தது. அவரை, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். நீண்ட நேர தேடுதலுக்குப் பிறகு சபிபுதீன் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து, திருவாரூர் தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.