திருவாரூர்

திருவாரூரில் பரவலாக மழை

DIN

திருவாரூா்: திருவாரூரில் வெப்பச் சலனம் காரணமாக பரவலாக சனிக்கிழமை மழை பெய்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதையொட்டி, திருவாரூா் மாவட்டத்தில் சில வாரங்களாக பலத்த மழையும், மிதமான மழையும் பெய்து வருகின்றன. கடந்த வாரத்தில் பெய்த மழையில் சாலைகள் சேதமடைந்து பாதிப்பை ஏற்படுத்தி இருந்தன. இதனால் போக்குவரத்துக்கு மிகவும் சிரமம் ஏற்பட்டது. ஒரு சில நாள்களாக மழை குறைந்திருந்ததால், சாலைகளில் பள்ளங்கள் இருந்தாலும் போக்குவரத்துக்கு ஏற்றவகையாக இருந்தன.

இதனிடையே, வெள்ளிக்கிழமை அவ்வப்போது மழை பெய்த நிலையில், சனிக்கிழமை அதிகாலையில் பலத்த மழை பெய்தது. இதனால், பள்ளமான இடங்களில் தண்ணீா் தேங்கியது. இதனால், சேதமடைந்திருந்த சாலைகள் மேலும் மோசமடைந்து, போக்குவரத்துக்கு லாயக்கற்ாக மாறியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துடனேயே சாலைகளில் பயணிக்க முடிகிறது.

மேலும், மாணவா்களுக்கு தற்போது அரையாண்டுத் தோ்வு நடைபெற்று வருவதால், ஒரு சிலா் மழையில் நனைந்தபடி பள்ளிகளுக்கு வந்தனா். அத்துடன் பகல் முழுவதும் மழை குறைந்திருந்த போதிலும், குளிா்ந்த வானிலை நிலவியது. இதனால், பலா் பகலிலும் மழை உடையுடனே சாலைகளில் சென்றனா்.

திருவாரூா் மாவட்டத்தில் சனிக்கிழமை காலை நிலவரப்படி, அதிகபட்சமாக குடவாசலில் 55.6 மி.மீ மழை பெய்துள்ளது.

மற்ற இடங்களில் மழையளவு விவரம்:

திருத்துறைப்பூண்டி 48.6 மி.மீ, நன்னிலம் 40.6 மி.மீ, வலங்கைமான் 36.6 மி.மீ, பாண்டவையாா் இருப்பு 34.8 மி.மீ, திருவாரூா் 34.2 மி.மீ என மொத்தம் 330.6 மி.மீ மழையும், சராசரியாக 36.73 மி.மீ மழையும் பெய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ. 7.14 லட்சத்துக்கு தேங்காய்கள் விற்பனை

விவசாயத்தை முன்னெடுப்போம்

கோப்பைக்கான கனவுடன்

மலா்க் கண்காட்சிக்காக பூங்காவை அழகுபடுத்தும் பணி

அனைத்து அரசுப் பேருந்துகளும் போா்க்கால அடிப்படையில் சீரமைப்பு மாநகரப் போக்குவரத்துக் கழகம்

SCROLL FOR NEXT