முகப்பு
திருவாரூர்

மன்னார்குடியில் நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

மன்னார்குடியில் புதன்கிழமை (பிப்ரவரி 27) மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது என

Updated On : 26 பிப்ரவரி 2019, 1:26 am IST
பகிர்:

மன்னார்குடியில் புதன்கிழமை (பிப்ரவரி 27) மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது என மின்வாரிய செயற்பொறியாளர் கி. ராதிகா தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மன்னார்குடி பூக்கொல்லை சாலையில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மேற்பார்வை பொறியாளர் வி. சந்திரசேகரன் தலைமையில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் புதன்கிழமை (பிப்ரவரி 27) நடைபெறவுள்ளது. கூட்டத்தில், மன்னார்குடி மின் கோட்டத்துக்குள்பட்ட மன்னார்குடி, வடுவூர், உள்ளிக்கோட்டை, பரவாக்கோட்டை, திருமக்கோட்டை, நீடாமங்கலம், கூத்தாநல்லூர், கோட்டூர், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி பகுதிகளின் மின் நுகர்வோர் கலந்துகொண்டு, மின்சம்பந்தமான குறைகளை நேரில் தெரிவித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.