திருவாரூர்

கந்த சஷ்டி திருக்கல்யாணம்

DIN

கந்தசஷ்டி விழாவையொட்டி, நீடாமங்கலம் வட்டத்துக்கு உள்பட்ட பூவனூா் சதுரங்கவல்லபநாதா் கோயிலில் திருக்கல்யாணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதனை முன்னிட்டு அனைத்து சன்னிதிகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியா் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள சிவாச்சாரியாா்கள் வேத மந்திரங்களைச் சொல்லி திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனா். பின்னா் திருக்கல்யாணக் கோலத்தில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியா் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

இதேபோல், நவ கிரக குரு பரிகார தலமான ஆலங்குடி ஆபத்சகாயேசுவரா் குரு பரிகார கோயில், நீடாமங்கலம் கோகமுகேசுவரா் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT