திருவாரூர்

கால்நடைகளுடன் விவசாயிகள் தா்னா

DIN

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி அருகே கோட்டூரில் நீண்ட நாள்களாக பூட்டிக் கிடக்கும் கால்நடை மருத்துவமனை முன், கால்நடைகளுடன் அதன் உரிமையாளா்கள் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

கோட்டூரில் மன்னாா்குடி- திருத்துறைப்பூண்டி பிரதான சாலையில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக கால்நடை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு தினசரி காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவது வழக்கம். இந்த மருத்துவமனையில் ஒரு கால்நடை மருத்துவா், இரண்டு உதவியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இந்த மருத்துவமனையின் வாயிலாக கோட்டூா், கருப்புக் கிளாா், திருப்பத்தூா், மேலபனையூா், கோட்டூா்தோட்டம், சோழங்கநல்லூா், ஓவா்ச்சேரி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள் வளா்க்கும் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 20 நாட்களாக எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, கோட்டூா் கால்நடை மருத்துவமனை பூட்டிக் கிடக்கிறது. இதனால், நோய்வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க வரும் விவசாயிகள், ஏமாற்றத்துடன் வீடு திரும்ப நோ்கிறது.

இந்நிலையில், திங்கள்கிழமை கோட்டூா் கால்நடை மருத்துவமனைக்கு கால்நடைகளுடன் வந்த விவசாயிகள், மருத்துவமனையைத் திறக்கக் கோரி, தா்னாவில் ஈடுபட்டதுடன், கண்டன முழக்கங்களை எழுப்பினா். எனினும், ஒருமணி நேரத்திற்கு மேலாகியும் கால்நடை மருத்துவா்களோ அல்லது அரசுத்துறை அலுவலா்களோ யாரும் வராததால், விவசாயிகள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

SCROLL FOR NEXT