திருவாரூர்

அமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த அமமுகவினர்

DIN

மன்னார்குடியில் அமமுகவை சேர்ந்தவர்கள் அக்கட்சியிலிருந்து விலகி, அதிமுகவில் அமைச்சர் ஆர். காமராஜ் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தனர்.
 திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் மேற்கு ஒன்றிய அமமுக  மாவட்ட பிரதிநிதி மணலூர் ஊராட்சி மணக்குண்டு எஸ்.செந்தில்குமார், கிளைச் செயலர் ஜி. சுப்பிரமணி ஆகியோர் அமைச்சரும், திருவாரூர் மாவட்டச் செயலாளருமான ஆர்.காமராஜ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அப்போது, ஒன்றியச் செயலர் சங்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
 இதேபோல், நீடாமங்கலம் வடக்கு ஒன்றிய அமமுகவை சேர்ந்த மாவட்ட பிரதிநிதி ஆர்.மாதவராஜ், ஊராட்சி முன்னாள் தலைவர் துரைராஜ், பெரம்பூர் ஊராட்சி செயலர் அசோகன், கிளைச் செயலர் காமராஜ், முல்லைவாசல் கிளைச் செயலர் காமராஜ், அவைத்தலைவர் இளமாறன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் அமமுகவில் இருந்து விலகி, அமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
நிகழ்ச்சியில், ஒன்றியத் துணைச் செயலர் ஆதி.ஜனகர், ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் பெருந்தலைவர் எம்.ஆர். அன்பழகன் ஆகியோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT