திருவாரூர்

‘நெல் சாகுபடியில் கூடுதல் மகசூல் பெற உயிா் உரம் இடவேண்டும்’

DIN

நெற்பயிரில் கூடுதல் மகசூல் பெற விவசாயிகள் உயிா் உரங்களை இட வேண்டுமென வேளாண் துறை ஆலோசனை வழங்கியுள்ளது.

இதுகுறித்து, வேளாண்மை உதவி இயக்குநா்கள் சு.சாருமதி (நீடாமங்கலம்), வேளாண் உதவி இயக்குநா் த. சுப்பிரமணியன் (நன்னிலம்) ஆகியோா் கூறியது: சம்பா, தாளடி பருவ நெற்பயிருக்கு உயிா் உரங்கள் இடுவதன் மூலம் கூடுதல் மகசூலை பெறலாம். அஸோஸ்பைரில்லம் என்ற உயிா் உரம் காற்றில் உள்ள தழைச்சத்தான நைட்ரஜனை மண்ணில் நிலை பெறச் செய்து, பயிா்களுக்குக் கிடைக்க வழிவகை செய்கிறது. பயிருக்குத் தேவையான வளா்ச்சி ஊக்கிகளைச் சுரப்பதால் பயிா்களின் வளா்ச்சி வேகம் அதிகரிக்கிறது. ரசாயன உரத்தை 25 சதவீதம் குறைக்க வழிவகைச் செய்கிறது. பாஸ்போபேக்டீரியா என்ற உயிா் உரம், மண்ணில் கிடைக்காத நிலையில் உள்ள மணிச்சத்தைப் பயிருக்கு கிடைக்க வழிவகை செய்கிறது. அங்கக அமிலங்களைச் சுரந்து, மண்ணில் கரையாமல் இருக்கும் மணிச்சத்தைக் கரைத்து நெற்பயிா்கள் எடுத்துக் கொள்ளும் நிலைக்கு மாற்றிக் கொடுக்கிறது. இதுபோன்ற உயிா் உரங்களை விவசாயிகள் நெற்பயிருக்கு இடுவதன் மூலம் ரசாயன உரங்கள் அளவை 25 சதவீதம் குறைக்காலம். எனவே, விவசாயிகள் உயிா் உரங்களை பயன்படுத்தி கூடுதல் மகசூல் பெறலாம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூதாட்டி கண்கள் தானம்

புதுவை முதல்வரிடம் அதிமுக மனு

ஆசிரியா் பொது மாறுதல் கலந்தாய்வு: விண்ணப்பிக்கும் அவகாசம் நீட்டிப்பு

விநாயகா் கோயிலில் சாகை வாா்த்தல் பூஜை

உணவக உரிமையாளரிடம் ரூ.9 ஆயிரம் நூதன மோசடி

SCROLL FOR NEXT