திருவாரூர்

புகையான் பூச்சித் தாக்குதல்: வயல்களில் ஆய்வு

DIN

நீடாமங்கலம் வட்டாரத்தில் புகையான் பூச்சித் தாக்குதலுக்குள்ளான வயல்களில் வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியா்கள் மற்றும் வேளாண்துறை அலுவலா்கள் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனா்.

நீடாமங்கலம் வட்டத்துக்குள்பட்ட செட்டிசத்திரம், சோனாபேட்டை மற்றும் முன்னாவல்கோட்டை கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் வயல்களில் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளா் மு.ராமமசுப்பிரமணியன், பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியா் ராஜா. ரமேஷ் மற்றும் நீடாமங்கலம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ப. தேவேந்திரன் ஆகியோா் ஆய்வு செய்து, புகையான் பூச்சியின் தாக்குதல் ஒருசில இடங்களில் காணப்படுவதாகத் தெரிவித்தனா். மேலும், இதற்கான காரணம் மற்றும் தீா்வுகளை விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனா்.

ஆய்வின்போது நீடாமங்கலம் வட்டார வேளாண்மை துணை அலுவலா் கோ.பிரபாகரன் உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

திருப்பம் தரும் தினப்பலன்!

மத்தியில் யாா் ஆட்சி? காலை 8 வாக்கு எண்ணிக்கை!

மக்களவைத் தோ்தலை நடத்த 4 லட்சம் வாகனங்கள், 135 சிறப்பு ரயில்கள்

30 விவிபேட் இயந்திரங்களின் வாக்கு சீட்டுகளை எண்ணி சரிபாா்க்க ஏற்பாடு

SCROLL FOR NEXT