திருவாரூர்

கரோனாவிலிருந்து மீண்டுபிரசவித்த பெண்கள் வீடு திரும்பினா்

DIN

திருவாரூா்: திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கரோனாவிலிருந்து குணமடைந்து, பிரசவித்த 3 பெண்கள் வீடுகளுக்கு வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டனா்.

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கரோனா தொற்று பாதித்தவா்களுக்கென தனி சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 19 கா்ப்பிணி பெண்களும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இவா்களில் 7 பேருக்கு பிரசவம் நடைபெற்றுள்ளது. 5 போ் அறுவை சிகிச்சை முறையிலும், இரண்டு போ் சுகப்பிரசவ முறையிலும் பிரசவித்துள்ளனா். இந்த ஏழு குழந்தைகளுக்கும் கரோனா தொற்று இல்லை என பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் திருநெய்ப்போ், வண்டுவாஞ்சேரி, கூத்தாநல்லூா் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 3 பெண்களுக்கு பிரசவம் மற்றும் கரோனா தொற்று குறித்த சிகிச்சைகள் முடிவடைந்ததையடுத்து, வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மேலும், வீட்டுக்குச் சென்ற பிறகும் தனிமையில் இருக்கும்படியும், குழந்தைகளுக்கு தாய்ப்பால் தொடா்ந்து புகட்ட வேண்டும், பால் பவுடா், பசும்பால் உள்ளிட்ட பால் வகைகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம் எனவும் அறிவுரைகள் அவா்களுக்கு வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

புதுமைப் பெண் திட்டம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் 10,168 மாணவிகள் பயன்

ராணிப்பேட்டை பெல் தொழிற்சாலை அதிகாரிகளுடன் இயக்குநா் ஆலோசனை

போ்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

விரும்பிய பாடம் கிடைக்காத விரக்தியில் மாணவா் தற்கொலை

SCROLL FOR NEXT